பைரவாவில் அனல் பறக்கும் வசனங்கள்! சாதனை படைக்கும் டீசர்

விஜயின், 60வது படமான பைரவாவை, வழிமேல் விழி வைத்து, எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர், அவரது ரசிகர்கள்.

தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என, முதலில் கூறப்பட்டது. ஆனால், பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதால், ரிலீசும் தள்ளிப் போயுள்ளது.

இந்த படத்துக்காக, கீர்த்தி சுரேஷுடன், முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் விஜய்.

வீரம் படத்துக்கு வசனம் எழுதிய பரதன் தான், இந்த படத்தின் இயக்குனர். ‘வீரம் படத்தில், அஜீத் பேசிய வசனங்கள், தன்னை மிகவும் கவர்ந்ததாக, விஜய் கூறினார்’ என, தெரிவித்துள்ள பரதன், ‘இந்த படத்திலும் அனல் தெறிக்கும் வசனங்கள், ஆக் ஷன் காட்சிகள் உண்டு’ என, விஜய் ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

இதேவேளை பைரவா டீசர் அடுத்த ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது. கடந்த வாரம் யு டியூபில் வெளியான டீசருக்கு இதுவரை 2 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

விரைவில் 70 லட்சம் பார்வைகளையும் இந்த டீசர் கடக்க உள்ளது. விஜய் நடித்து வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அவருடைய டீசர், டிரைலர் ஆகியவை யு டியூபில் எப்போதுமே சாதனைகளை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில் பைரவா டீசரும் தற்போது மேலும் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த தெறி டீசர் 3 லட்சம் லைக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுதான் விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பட்ச லைக்குகளைப் பெற்ற படமாக இருந்து வருகிறது. அந்த சாதனையையும் பைரவா டீசர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல தெறி டீசரை இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர். அந்த சாதனையையும் பைரவா டீசர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

அஜித் நடித்து படம் வெளிவந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டதால் அஜித் ரசிகர்களால் தற்போது விஜய் பட டீசருக்குப் போட்டியாக புதிய சாதனைகள் எதையும் படைக்க முடியாமல் இருக்கிறது. வேதாளம் பட டீசர் சாதனையை தெறி, பைரவா ஆகிய டீசர்கள் முறியடித்துவிட்டன. இப்போது அஜித் படத்தின் டீசர்கள் சாதனை புரிய வேண்டும் என்றால் அஜித்தின் அடுத்த பட டீசர் வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. அது வந்த பின் பைரவா, தெறி சாதனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்பது மட்டும் உறுதி.

Related Posts