போருக்குப் பின்னர் வடக்கு மாகாணக்கல்வி பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது

வடக்கு மாகாண கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் வீழ்ச்­சி­ய­டை­யாது காணப்­பட்­டி­ருந்­தது. எனினும் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் கல்வி வளர்ச்­சி­யா­னது பாரி­ய­ளவில் வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதிராஜா தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பாணம் இரா­ம­நாதன் மகளிர் கல்­லூ­ரியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற வலி­காம வலய ஆசி­ரிய மாநாட்டில் பிரதம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­றி­ய­தா­வது,

எமது கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் கூட வீழ்ந்து விட­வில்லை. ஆனால் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் பாரி­ய­ளவில் கல்வி மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. எனவே இதற்­கான காரணம் என்­வென இனங்­கா­ணப்­பட்டு அவை நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். ஏனெனில் யாழ்ப்­பா­ண­மா­னது கல்­வியில் உயர்ந்­தது என்ற பாரம்­ப­ரி­யமும் வர­லாறும் கொண்­டது. ஆகவே அதனை நாம் இழந்து விடக் கூடாது.

தற்­போது பல்­க­லை­க்க­ழகங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களில் 60 வீத­மா­ன­வர்கள் கலைத்­து­றையை சார்ந்­த­வர்­க­ளா­கவே உள்­ளார்கள். இந்­நி­லைமை மாற்­றப்­பட வேண்டும். கூடிய மாண­வர்கள் விஞ்­ஞான துறை, வர்த்­தக துறை­களில் பயி­லு­கின்­ற­வர்­க­ளாக அல்­லது அவற்றை பயி­லக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற்­றப்­பட வேண்டும். எனவே ஒரு மாணவன் எட்டாம் வகுப்­பிற்கு பின்­ன­ரான அடுத்து மூன்று வரு­டங்கள் அவர் பல்­க­லை­க்க­ழ­கத்தில் என்ன துறை கற்­கப்­போ­கிறார் என்­பதில் ஆயத்­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இன்று அதி­க­ள­வான மாண­வர்கள் கலைத்­துறையைக் கற்று வெளி­யே­றி­யுள்ள நிலை­யிலும் அவர்கள் கற்­ற­தற்கு பொருத்­த­மான வேலைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இதே­வேளை தாதியர் துறை­யிலே அதி­க­ள­வான விண்­ணப்­பங்கள் இருக்­கின்ற போதும் அதில் எமது மாண­வர்கள் உள்ளீர்க்­கப்படு­வது குறை­வா­கவே உள்­ளது.

இதே­வேளை நாங்கள் அர­சி­யலில் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளாக தற்­போது இருப்­ப­தில்லை.. ஆனால் போதை­வஸ்­துக்கும் மது­வுக்கும் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கிறோம். எனவே இந்­நி­லைமை மாற்­ற­ம­டைய வேண்டும். தற்­போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தை முற்றாக மீட்டெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Related Posts