பேஸ்புக் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையரின் வயதெல்லை அதிகரிப்பு?

முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர்.

இவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இளம் சமூகத்தைப் பாதுகாக்க முகநூலில் கணக்கு ஆரம்பிக்கும் இலங்கையர்களின் வயது எல்லையை 16 ஆக மாற்றுவதற்கு அரசாங்கம் சிந்தித்து வருகின்றது.

இது குறித்து சட்டவாளர்கள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகளின் கருத்துக்களை அரசாங்கம் அறிந்து வருகின்றது.

Related Posts