பேஸ்புக் அலுவலகம் எப்படி இருக்கும் ?? இதோ அலுவலகத்தை அறிமுகப்படுத்துகின்றார் மார்க் ஜுக்கர்பெர்க்

தினமும் 665 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் அலுவலகம் எப்படி இருக்கும் என்று அறிந்துக்கொள்ள விரும்பியதுண்டா? முதல் முறையாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது அலுவலகத்தை பேஸ்புக் லைவ் மூலமாக அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mark-facebook-office

மற்ற அலுவலகங்கள் போல இல்லாமல் மிகப் பெரிய திறந்த வெளியாக காட்சி அளிக்கிறது கலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமை அலுவலகம். அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விஷயம் மார்க் ஜுக்கர்பெர்க்கு கூட தனிப்பட்ட அறை இல்லை என்பது தான்.

இது பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த வீடியோவில் கூறியிருப்பது “ ஊழியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு இது போன்ற திறந்த அமைப்புதான் சிறந்தது. இதன் மூலம் வேலையை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வும், ஒத்துழைப்பு செய்துக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Related Posts