பேஸ்புக்கில் பொய்ப் பிரச்சாரம் செய்த மாணவன் விளக்கமறியலில்

இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் குற்ற விசாரணைப் பிரிவினரால் அந்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார்.

18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts