பேஸ்புக்கில் நண்பராக பழகி 20 பெண்களை துஸ்பிரயோகம் செய்து போலி டாக்டர் கைது

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பகிடியாலாவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.பட்டப்படிப்பை பாதியில் முடித்த இவர் ஒரு டாக்டரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார்.

பின்னர் தானே ஒரு கிளினிக் தொடங்கி டாக்டராக செயல்பட தொடங்கினார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்ணிடம் அன்பாக பேசி வசியப்படுத்தினார். பின்னர் தனது வலையில் வீழ்த்தி கற்பழித்து வந்தார்.

இதையடுத்து அவர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி தன்னை டாக்டர் என்று கூறி பல பெண்களை நண்பர் ஆக்கினார்.

வழுக்கை தலையுடன் கூடிய அவர் ‘விக்’ அணிந்து வழுக்கையை மறைத்துக் கொண்டார். மேலும் கோட் சூட் அணிந்தும் பல்வேறு புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை அளிப்பதாகவும் தனது பெண் நண்பர்களிடம் கூறினார்.

இதனை நம்பி அவரிடம் சிகிச்சை பெற விரும்பும் பெண்களை நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைப்பார். அங்கு அவரிடம் இனிமையாக பேசி தன் வலையில் வீழ்த்துவார். அப்போது அந்த பெண்ணை நிர்வாண படம் எடுத்து பின்னர் அதை காட்டி பணம், நகைகளை பறித்து வந்தார்.

ராஜ்குமாரால் பாதிக்கப்பட்ட குண்டூரைச் சேர்ந்த 2 பெண்கள் பெலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து கர்னூல் பெலிஸ்சார் ராஜ்குமார் கிளினிக்குக்கு சென்று அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் 2008–ம் ஆண்டு முதல் போலி டாக்டர் என்றும் வெலுகோடு, கம்மம், மதனப்பள்ளி, கர்னூல் ஆகிய பகுதிகளில் 20 பெண்களை துஸ்பிரயோகம் செய்து அவர்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.

முறைப்பாடு செய்த 2 பெண்களிடம் நகையை பறித்த ராஜ்குமார் அதனை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து இருந்தார். அந்த நகைகளை பெலிஸ்சார் மீட்டனர்.

கைதான ராஜ்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Posts