Ad Widget

பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சி

பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமது படையினரின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

யுஎஸ்எஸ் ஒக்லஹோமா கடற்படைக் கப்பலில் இருந்த படையினர் ஹவாயில் புதைக்கப்பட்டுள்ள இடம்
யுஎஸ்எஸ் ஒக்லஹோமா கடற்படைக் கப்பலில் இருந்த படையினர் ஹவாயில் புதைக்கப்பட்டுள்ள இடம்

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தலையிட பேர்ள் ஹார்பர் மீது ஜப்பான் நடத்தியத் தாக்குதல் முக்கியமான காரணமாக இருந்தது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான நடத்திய அத்தாக்குதலில் ஏராளமான அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

தற்போது தடயவியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நோக்கிலேயே அவர்களது உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஒக்லஹோமா என்று பெயரிடப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் மீது நீருக்கு அடியிலிருந்து குண்டுவீசி ஜப்பான் நடத்தியத் தாக்குதலில் அந்தக் கப்பல் கவிழிந்து பலர் உயிரிழந்தனர்.

பின்னர் அவர்கள் ஹவாயில் புதைக்கப்பட்டனர். அந்த சமயத்தில் மரபணு சோதனை என்பது அறியப்படாத ஒன்றாக இருந்தது. இப்போது அந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை உட்பட பல வழிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

அவ்வகையில் அடையாளம் காணப்படுபவர்களின் உடல்கள் இராணுவ மரியாதைகளுடன் மீண்டும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

ஜப்பான் பேர்ள் ஹார்பர் மீது நடத்தியத் தாக்குதலில் சுமார் 2500 இராணுவம் மற்றும் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போர் வலராற்றில் இது முக்கியமானதொரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Related Posts