தனியார் பேருந்து கட்டணத்தை 6.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாளை முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பேருந்து கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்தார். இதன்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, பேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், 6.5 வீத கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.