பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 6.28 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related Posts