பேருந்தில் மதுபோதையில் பெண் பயணி ஒருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவச் சிப்பாய்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர், மதுபோதையில் பெண் பயணி ஒருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டில் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் மாங்குளத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் பெண் பயணி முறைப்பாடு வழங்க மறுத்ததால், பேருந்து நடத்துனர், இராணுவச் சிப்பாயை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் அந்த இராணுவச் சிப்பாய் விடுப்பில் வீடு திரும்பியுள்ளார்.

இராணுவச் சிப்பாய் மது போதையில் இருந்ததால், அவரது பயணப் பையை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அதற்குள் சிறுவர்களின் விளையாட்டு துப்பாக்கி ஒன்றும் படையினர் பயன்படுத்தும் கூரிய கத்தி ஒன்றும் அதற்குள் மீட்கப்பட்டன.

அவற்றை அவர் எடுத்துச் செல்லும் நோக்கம் தொடர்பில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அவரை தடுத்து வைத்து மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின்னர், இராணுவ பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts