பேராதனை பல்கலை மாணவர்கள் 15 பேர் கைது

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​

இன்று அதிகாலை 01.00 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ​

பேராதனை – கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேருக்கு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பகிடிவதை வழங்குவதாக பல்கலைக்கழக ஒழுக்காற்று மேற்பார்வையாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ​

இதன்படி, அவர் பேராதனை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டை சுற்றிவளைத்து மாணவர்களை கைது செய்துள்ளனர்.

பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

சந்தேககத்திற்குரிய மாணவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts