பேராதனை பல்கலைகழக முதற்கலை வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும்.

இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk/edce என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாக சமூகமளித்து விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, 2014ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts