பேராசிரியர்கள் பொது நலனுக்காக செயற்பட வேண்டும் – பல்கலை. துணைவேந்தர்

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தங்களது பதவிகளை இனம்சார், மக்கள் நலன்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

Vasanthe-Arasaraddnam-UNI

யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் எழுதிய ‘வட இலங்கையில் சுற்றுலாவும் தொல்லியல் மரபுரிமை சின்னங்களும்’ நூல் வெளியீடு கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை (05) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘பேராசிரியர்கள் தங்கள் பேராசிரியர் பதவிகளை புகழுக்காகவும், பெருமைக்காகவும், பணத்திற்காகவும் பயன்படுத்தாமல் மக்கள் நலன்சார் விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

‘இவ்வாறான நூல்கள் மூலம் வடக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயனடைவதுடன், எமது பிரதேசங்களிலுள்ள வரலாற்று சின்னங்களை அனைவரும் அறியக்கூடியதாக சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts