பேரவை நிகழ்வில் முதல்வர் பங்கேற்க தடைபோட்டவர்கள் யார்?

தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக்  கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 11 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண சபை அமைச்சர்கள் மூவர் உட்பட 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கியதாகக் கூறி அக்கடிதம் ஊடகங்களுக்கு சனிக்கிமை அனுப்பி வைக்கப்பட்டு அது நேற்று ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

ஆனால் அதில் கையொப்பமிட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே  வடமாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் ஐங்கரநேசன் , சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், து.ரவிகரன் , சிவனேசன், க.சர்வேஸ்வரன், நடராஜா , கஜதீபன் , விந்தன் கனகரட்ணம், இந்திரராஜா  ஆகியோர் இக்கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லையெனத் தெரிவித்தனர்

 

இக் கடிதத்தில் கையொப்பமிட்ட உறுதிப்படுத்தப்பட்ட பெயர் விபரங்கள்.

1.அவைத்தலைவலர் சி.வி.கே.சிவஞானம்

2.அமைச்சர் குருகுலராஜா

3.அமைச்சர் டெனீஸ்வரன்

4.அமைச்சர் சத்தியலிங்கம் (தொலைபேசி ஒப்புதல்)

5.அயூப் அஸ்மின்

6.அரியரட்ணம்

7.பசுபதிப்பிள்ளை

8.சயந்தன்

9.ஆர்னோல்ட்

10.சுகிர்தன்

11. பரஞ்சோதி

12. தியாகராஜா

13.தர்மலிங்கம்

14.சிராய்வா

15.குணசீலன்

16.கமலேஜ்வரன்

17.லிங்கநாதன்

18.சிவயோகன்

19.அன்ரனி ஜெகநாதன்

Related Posts