பேரவையின் செயற்குழுவிலிருந்து விலகினார் முதலமைச்சர்!

தமிழ் மக்கள் பேரவையின் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு இறுதி செய்யும் முகமாக நேற்று முன்தினம் யாழ். பொது நூலகத்தில் கூடியது இதில் கலந்து கொண்ட முதலமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் 4பேர் கொண்ட நடவடிக்கைக் குழுவை நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது மேலும் 7பேரை உள்ளடக்கி, 11 பேர் கொண்ட செயற்குழுவாக மாற்றப்பட்டது. இந்த நிலையிலேயே, குறித்த செயற்குழுவிலிருந்து விலகிக் கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கூட்டத்தின் நிறைவில் அறிவித்ததாக, அதில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Related Posts