Ad Widget

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம் : நடிகர் சங்கம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

nadigarsangam-nasar

இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 26 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது.

ஆனால் மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. இதனால் விடுதலையில் முட்டுக் கட்டை ஏற்பட்டது. 2 அரசுகளும் ஒருமித்த கருத்துடன் இருந்திருந்தால் அவர்கள் விடுதலை ஆகி இருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதல்வருக்கு அதற்கான நேரம் ஒதுக்கி தருமாறு கடிதம் எழுதப்படும். அவர் ஒதுக்கும் தேதியில் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஈர்க்கப்படும்’ என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts