பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் திகார்

‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பேரரசு. இவருடைய படங்களின் தலைப்பு ஊரின் பெயரை கொண்டே உருவாக்கி வந்தார். அந்த வகையில் இவர் தற்போது இயக்கும் படம் ‘திகார்’. இதில் கதாநாயகனாக பார்த்திபன் நடிக்கிறார்.

parththeepan

இப்படத்தில் மற்றொரு நாயகனாக உன்னிமுகுந்தனும் கதாநாயகியாக அகன்ஷாபுரியும் நடிக்கிறார்கள். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான், கார்த்திகேயன், பிரியங்கா, தேவன், மும்பை சங்கர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். ஈரான் நடிகர் ஜியாத் கான் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார்.

காயத்ரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் இப்படத்திற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். ஷபீர் இசையமைக்கவுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேரரசு கூறும்போது,

பார்த்திபன்-உன்னிமுகுந்தன் என இரண்டு தாதாக்களின் ஆக்ரோஷமான மோதல் போராட்டம் தான் திகார் படத்தின் ஒற்றை வரி கதை.

வழக்கமான கமர்ஷியல் படங்களான என் படைப்புகளில் அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமெண்ட் இருக்கும். ஆனால் முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமென்ட்டை வைத்திருக்கிறோம். வழக்கமான என் படங்கள் மாதிரி திகார் இருக்காது. ஏறக்குறைய எட்டு அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கும். அட்வான்ஸ் டெக்னிகலாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

நான் வழக்கமாக ஊர்ப்பெயரை வைத்தே படமெடுத்து வருகிறேன். என் கதைகளுக்காக அது யதார்த்தமாக அமைந்து விட்டது. இந்த படத்திற்கு திகார் என்று பெயர் வைத்ததுமே இந்த இசை வெளியீட்டுக்கு திகாரின் பெண் புலி கிரண்பேடி அவர்களை அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம்.

அது நிறைவேறி விட்டது. காஞ்சி என்றால் அண்ணா, ஈரோடு என்றார் பெரியார், பசும்பொன் என்றால் முத்துராமலிங்க தேவர், விருதுநகர் என்றால் காமராஜர் அது போல திகார் என்றால் கிரண்பேடி.

அதே மாதிரி இசைத்தகட்டை பெற்றுக்கொள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பேரன் சி.வ.சிதம்பரம் அவர்கள் ஒத்துக்கொண்டது எங்களது குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார் பேரரசு.

Related Posts