பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான்!! : விக்னேஸ்வரன்

எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை. இம்முறை வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.

உள்ளூரில் ஒரு பிரச்சனையிருந்தது. அன்று பஸ்கள் ஓடவில்லை. இதனால் உள்ளூரிலிருந்து மக்கள் வருவதில் பிரச்சனையிருந்தது. அதைவிட, அதிகாலையிலேயே நல்ல மழை. ஆனால் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். பெரிய தூரத்தை அவர்கள் நடந்து கடந்தார்கள்.

பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான். அவர்கள் பேரணிக்கு வந்திருந்தால், கலந்து கொண்ட மக்களை பார்த்திருக்கலாம்“ என்றார்.

Related Posts