பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாடு விலை இல்லை!!

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இன்று நள்ளிரவு முதல் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், வாடகை முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாயாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts