பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் சாத்தியம்

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை கோதுமை மா மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும் நிலை காணப்படுவதாகவும் என அகில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பிறிமா நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை 40 ரூபாவினாலும் செரண்டிப் நிறுவனம் 35 ரூபாவினாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts