இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இந்த விலை திருத்தம் இன்று (ஏப்ரல் 19) முதல் நடைமுறைக்கு வரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 84 ரூபாயினால் அதிகரித்து 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 90 ரூபாயினால் 373 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்.
ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 75 ரூபாயினால் அதிகரித்து 329 ரூபாயாகவும்,ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 113 ரூபாயினால் அதிகரித்து 289 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்.
லங்கா ஐஓசியும் நேற்று (18) முதல் விலையில் திருத்தம் செய்துள்ளது.
அதன்படி, லங்கா ஐஓசி நடத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 338 ரூபாய்க்கும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 367 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லங்கா ஐஓசி ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 289 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 327 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.