பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு!

பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய “நவெஸ்கா லேடி” கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என ஊர்ஜினப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

Related Posts