பெற்றோல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டில் காணப்பட்டு வரும் பெற்றோல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க வேண்டும் என அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், கனிய எண்ணெய் வள அமைச்சின் செயலாளர் உபாலி தென்னகோன் கருத்து வெளியிடுகையில், நேற்றய தினம் சுமார் 2400 மெட்லிக் தொன் அளவிலான பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய தினம் பெற்றோல் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பெற்றோல் விநியோகம் சீர்படுத்தப்படும் எனினும் எரிபொருள் நிலையங்களை அதுவரை மூடிவைப்பது என்பது சட்ட விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல பொதுமக்களும் தற்போதைய நிலையில் தேவைக்கு அதிகமாக பெற்றோலினைக் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் உபாலி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த பெற்றோலினை நாட்டில் இறுக்குவதற்காக தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், எனினும் தாம் அதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை எனவும் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்க கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts