பெற்றோல், டிசல் விலை அதிகரிப்பு?

பெற்றோலின் விலையை 20 ரூபாவாலும் டிசலின் விலையை 12 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக விலை சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைச்சூத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட போதும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

வரும் செவ்வாய்கிழமை ஒப்புதலளிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும் டிசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளிக்கும் என நிதி அமைச்சின் உயர்மட்டம் தெரிவித்தது.

Related Posts