பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் நால்வர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள் மற்றும் கோடரியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (20) இரவு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அவர்களது வீடுகளிலேயே வைத்து கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள் மற்றும் கோடரி 1 மோட்டார் சைக்களில் உள்ளிட்டவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி. காணொளி மூலம் அடையாளம் காணப்பட்டதன் அடிப்படையில் இந்த நான்கு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பொலிஸாரினால், கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், நால்வரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவித்தனர்.

Related Posts