பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கைது

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை கொண்டுசெல்வதை தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சுமார் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் தாங்கிகளை மறித்தும், விமான நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசென்ற ரயிலை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோலிய வளத்துறை ஊழியர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து 15 எரிபொருள் தாங்கிகள் விடுவிக்கப்பட்டு வெளியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts