பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் அறவிடப்படுமாயின் , உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் அறவிடப்படுமாயின் அருகில் அமைந்திருக்கும் வலயக் கல்வி அலுவலகத்தில் அல்லது உள்ளூர் அலுவலகத்தில் அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பணம் அறவிடப்படுவதாக கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.