பெற்றொல் கப்பலும் நாட்டை வந்தடைந்தது!! – தூர இடங்களுக்கு முதலில் விநியோகம்!!

03 வாரங்களுக்கு மேலான காலப்பகுதியின் பின்னர், பெற்றோல் ஏற்றிய முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

கப்பலில் உள்ள பெற்றோலின் மாதிரி பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

02 டீசல் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட டீசலை இறக்கும் பணி இறுதி இலக்கை அடைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் மற்றொரு கப்பலில் பெற்றோல் இறங்க உள்ளது என்று கூறினார்.

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் தொலைதூர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாளை முதல் ரயில்கள் மற்றும் தாங்கிகள் மூலம் இந்த எரிபொருளை விநியோகிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts