பெருமளவு ஐ போன்கள், சிம் காட்களுடன் சீன நாட்டவர் கைது!!

நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 402 ஐபோன்கள், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட மேலும் சில தொடர்பாடல் உபகரணங்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தங்கியிருந்த 2 இலங்கையர்கள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

Related Posts