பெருந்தொகைப் போதைப் பொருட்களுடன் வடக்கு கடற்பகுதியில் ஆறு இந்தியர்கள் கைது!

ஹெரோயின் என சந்தேகிக்கத் தக்கதான பெருந்தொகைப் போதைப் பொருட்களுடன் வடக்கு கடற்பகுதியில் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் நிறை 13.5 கிலோ கிராம் எனவும் இதன் பெறுமதி 13 கோடி ரூபா எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அடுத்த கட்ட விசாரணைக்காக குறித்த போதைப் பொருள் தொகையும், கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts