பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புறம்போக்கு’. ஜனநாதன் இயக்கியுள்ள இப்படம் மே 15ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தையடுத்து ‘அமரகாவியம்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார்.

aryaaa

ஆர்யாவின் தம்பியான சத்யாவை வைத்து ‘அமரகாவியம்’ படத்தை இயக்கிய ஜீவா, தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாக உள்ளது. தனது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக எடுக்க இருக்கிறார்.

இப்படத்தை ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கான வேலை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைக்கவுள்ளார்கள். இப்படம் பற்றிய முழுவிவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Related Posts