உடுவில் பிரதேச சபைக்கு உட்பட பல வீதிகளுக்கு பெயர் பலகைகள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் அதனைப் பொருத்த பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுன்னாகம் நகர மத்தி சிவில் பாதுகாப்புக் குழவினால் பிரதேச சபைத் தலைவரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் நகர பகுதியை அண்டிக் காணப்படும் முக்கிய வீதிகளாக பிரதேச சபையின் ஆதன டாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள இராமநாதன் வீதி, குமாரசாமி புலவர் வீதி, டாக்டர் சுப்பிரமணியம் வீதி, முகாந்திர நாராயணர் வீதி, கிருஸ்ணர் விதி என்பவற்றிற்கே பெயர் பலகைகள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் இதனால் வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் உரிய வீதிகளை அடையாளம் காண்பதில் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.