சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார்.
இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் குறித்த முச்சக்கரவண்டி சாரதி குறித்த உத்தரவு பத்திரத்தை சமுக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
குறித்த புகைப்படம் தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.