பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு!!

முல்லைத்தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினைத் தோண்டிய போதே குறித்த மனித எச்சங்கள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts