யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள 50 குடும்பங்களுக்கு 10 கிலோ எடையுள்ள தலா ஒவ்வொரு அரிசிப் பைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று திங்கட்கிழமை (22) வழங்கினார்.
வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சபாபதிப்பிள்ளை நலன்புரி வசிக்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கே முதலமைச்சர் இந்த அரிசி பைகளை வழங்கினார்.
முகாமிலுள்ள குடும்பங்களின் வாழ்வாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இந்த அரிசி பைகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளன.