பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடிய கான்ஸ்டபில் வசமாக சிக்கினார்

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்கச் சங்கிலி 85,000 ரூபா பெறுமதியானது எனத் தெரியவந்துள்ளது.

இதனை கொள்ளையிட்டு தப்பி ஓடிய வேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் பூங்கா பாதுகாவலர்கள் உள்ளிட்ட குழுவினர், சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

பின்னர் அவர் கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன் பின்னரே அவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts