பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு

நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் பாவனை குறைவடைந்துள்ளதாகவும், எனினும் போதைப் பொருள் கொண்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts