பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் ‘இனி வரும் நாட்கள்’

மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் ‘இனி வரும் நாட்கள்’. எம்.ஜே.டி. புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம்.

eni-varum-nadkal

இப்படத்தில் இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார்.

டாக்குமெண்டரி எடுக்க போகும் கல்லூரி மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதை தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு நடிப்பில் முக்கியத்துவம் எல்லா படங்களிலும் கிடைத்து விடுவதில்லை, ஆனால் இந்த படத்தில் முழுவதுமே பெண்கள் மட்டும் நடிப்பதால், அவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

பாட்டு, சண்டை, காமெடி என்று பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைய இருக்கின்றன.

படத்தில் கதாநாயகிகள் இருக்கிறார்கள் கதாநாயகன் எங்கே? என்று கேட்டதற்கு படத்தின் திரைக்கதையே நாயகன் என்று இயக்குனர் துளசிதாஸ் கூறுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கம்பம், நாகர்கோவில், தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை சஞ்சீவ் சங்கர் கவனிக்கிறார். எம்.ஜி.ஸ்ரீ.குமார் இசையமைக்கிறார்.

Related Posts