பெண்கள் போராட்டம் எதிரொலி: கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத்

சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த அங்குள்ள தமிழர்கள் அனிருத்தை அழைத்து இருந்தனர். இதற்காக தனது இசைக்குழுவினருடன் ஒரு வாரத்துக்கு முன்பு கனடா சென்று இருந்தார். அப்போதுதான் ஆபாச பாடல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

aniruth

இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அவர் சென்னை திரும்ப விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சென்னைக்கு வரவில்லை. கடைசி நேரத்தில் சென்னை திரும்புவதை ரத்து செய்துவிட்டார்.

அவரது இசைக்குழுவை சேர்ந்த மற்ற கலைஞர்கள் மட்டுமே சென்னை வந்தனர். போலீஸ் நடவடிக்கை மற்றும் பெண்கள் போராட்டங்கள் காரணமாக அவர் கனடாவிலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது.

Related Posts