பெண்கள் பாதுகாப்பு நிலைய அடிக்கல் நாட்டுவிழா

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு நிலையததுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (01) அச்சுவேலியில் இடம்பெற்றது.

அச்சுவேலி அரச சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடிக்கல்லை நாட்டினார்.

இந்த நிலையம் தொடர்பில் யாழ். மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் கருத்துக்கூறுகையில்,

அசம்பாவித (துஷ்பிரயோகம்) சம்பவங்களால் பாதிக்கப்படும் சிறுமிகள் மற்றும் சிறுவயது தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களை பராமரிக்கும் பொருட்டே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான கட்டடப்பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும். அதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் அளவில் இதனுடைய கட்டடப்பணிகள் முடிவடைந்து இந்த நிலையம் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்.

Related Posts