வடக்கின் யுத்தத்தினால் கணவர்களை இழந்த பெண்களின் வாழ்வாதார உதவிகள் என்பது தற்போதைய அரசிலும் கட்டியேழுப்ப முடியாத நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் மகளிர் அமைச்சு எடுக்க முன்வர வேண்டும் என்று மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும்,தொழில் முனைவோரும், மேன்பாடும், வார்த்தகமும், வாணிபம் துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
குறிப்பாக பெண்களின் உரிமையில் நிலைமாறு காலநீதியில் வடக்கில் இன்றும் கேள்விக்குறியாக இருக்கின்றது என்றும் தற்போதைய காலத்திலும் அதற்காக தீர்வு கிடைக்கவில்லை என்று வடக்கின் பெண்களை மையப்படுத்துகின்ற அமைப்புகள் சுட்டிகாட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நிலைமாறு காலநீதியினை வலியுறுத்தி அமரா மற்றும் பெண்கள் சமாச அங்கத்தவர்கள் அரசியற் பிரமுகர்களை அணுகும் நிகழ்வு நேற்று (25) மாலை யாழில் அந்த மையத்தின் பிரதான அமைப்பாளர் ஜொன்சன் கிசோபர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மகளிர் விவகாரம்,புனர்வாழ்வு அளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும்,தொழில் முனைவோரும், மேன்பாடும், வார்த்தகமும், வாணிபம் அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டார்.
மேலும் தெரிவிக்கையில் எமது பெண் குறித்த விடையம் தொடர்பாக யாருரையும் கண்டதும் பயந்து நடந்து கொள்ளும் ஒரு நிலை அது தான் இவ்வாறான விடையங்களுக்கு பின்னிடத்திற்கு ஒரு நகர்வாக காணப்படுகின்றது.
எனவே தற்போது பெண்கள் துணியவேண்டும் அதுதான் எமக்கு பலம் என்று தெரிவித்தார்