பூர்வீக இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படவேண்டும்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர், குறித்த பிரதேசத்தை இராணுவமும், கடற்படையினரும் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றை விடுவிக்க மறுத்து வருவதாகவும் விசனம் வெளியிட்டார்.

இந்தப் பிரதேசத்திலேயே இயற்கை மீன்பிடித்துறையான மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அமைந்துள்ளது.

மயிலிட்டி மீன்பிடித்துறையை விடுவித்து, அதனை அண்டிய கடற்கரைப் பிரதேசத்தை சுதந்திரமாக பயன்படுத்த மக்களுக்கு இடமளிக்காது விட்டால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்பார்க்கும் நல்லிணக்க இலக்கை அடைய முடியாது என்றும் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts