பூமியைவிட மிகப்பெரிய கெப்ளர்-10C என்ற கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியை விட 17 மடங்கு எடையுள்ள, பூமியைப் பேன்று இரண்டு மடங்கு பெரிய அளவுடைய கெப்ளர்-10C என்ற கோள் தற்போது நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோள் 45 நாட்களுக்கு ஒரு முறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக தெரியவந்துள்ளது. இது பூமியில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
‘இந்த கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியைவிட பலமடங்கு பெரியது இந்த கெப்ளர்-10C’ என்று விஞ்ஞானி சேவியர் டுமஸ்கியு கூறியுள்ளார்.
இந்தக் கோள் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.