பூநகரி பிரதேச மருத்துவமனையில் நீர்ப்பற்றாக்குறையினால் நோயாளர்கள் அவதி!!

பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நோயாளர்கள் நாளாந்தம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவமனைக்குரிய குடிநீர் மாத்திரம் பூநகரி – பள்ளிக்குடாவிலிருந்து நாள்தோறும் 1000 லீற்றர் எடுத்துவரப்படுவதாகவும், எனினும் அது நாளாந்த தேவைக்கு கூட போதாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நன்னீர்க் கிணறுகள் ஒருங்கே அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts