கிளிநொச்சி- பூநகரி பிரதேசத்தில் இடம்பெற்ற கண் பரிசோதனையின் போது, 38 பேர் முன்வந்து இலங்கை கண்தான அமைப்புக்கு தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர்.
இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில், பூநகரி கிராஞ்சி பாடசாலையில் இடம்பெற்ற கண் பரிசோதனை நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 398 பேருக்கு கண் பரிசோதனை இடம்பெற்றது.
மருத்துவர் வைத்திய கலாநிதி அஜந்த அபேயவர்தன, இதன் போது கண் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் அஜித் கரியகாரவன, பிரிகேடியர் சுபாஷண வெலிக்கல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.