பூஜித்தவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

pujeetha-police

நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல அபிப்பிராயம் பெற்ற ஒருவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக பொதுமக்களின் சிவில் அமைப்புகள் பலவும் புதிய பொலிஸ்மா அதிபருக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

அத்துடன் இலங்கை வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் பணியாற்றி அங்குள்ள பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றவரும், மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை முதல்தடவையாகும்.

அதன் காரணமாக மூவின மக்களினதும் பாராட்டுக்கள், வாழ்த்துக்களும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் ஏராளமானவர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பூஜித் ஜயசுந்தரவுக்குத் தெரிவித்துள்ளனர்.

Related Posts