நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்துக்கு அருகில் சென்று ஆச்சரியகரமான பல சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது. தற்போது, புளூட்டோவில் 11,000 அடி உயரமுடைய மலைத்தொடர்கள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது.
4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரிய குடும்பத்தில் புளூட்டோ 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக கருதப்படுகிறது. நாசாவின் விண்கலம் தற்போது புளூட்டோவின் மிகப்பெரிய சந்திரனான கேரான் என்பதன் படங்களையும் அனுப்பி வருகிறது.
புளூட்டோ எதிர்பார்த்ததைவிட சற்று பெரிதான கிரகமாக இருப்பதால், புவியீர்ப்பு ஊடியக்கங்கள் மூலம் உஷ்ணப்படுத்த முடியாததாக உள்ளது. எனவே புளூட்டோவில் மலைகள் உருவாக்கம் வேறு பல நிகழ்வுகளால் சாத்தியமாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பனிபடந்த கிரகங்களில் நிலவியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கலாம் என்பது பற்றிய புதிய சிந்தனைகளை இந்த புளூட்டோ கண்டுபிடிப்புகள் உருவாக்கியுள்ளன.