புளியங்குளத்தில் பச்சிளம் குழந்தை கொலை!!

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற்போயுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, குழந்தையை உறவினர்கள் தேடினார்கள். குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
​பின்னர் குழந்தை நெடுங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டது.

குழந்தையின் தாயின் மாமியார் ஒருவரினால் குழந்தை கிணற்றில் போடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்தப் பெண் கைது செய்யப்பட்டுடார்.அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts