புலி படம் பார்த்த குழந்தைகளுக்கு விஜய் ரூ 5 லட்சம் உதவி!

நடிகர் – இயக்குநர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு நடிகர் விஜய் ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.

புலி படத்தை அவரது அறக்கட்டளை நடத்தும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பார்த்ததற்காக இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Vijay-pats-Lawrence-2

விஜய்யும், லாரன்ஸும் நீண்ட காலமாக நண்பர்கள். ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.

விஜய் நடித்த ‘புலி’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாரன்ஸ் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் உயர்தரமான பள்ளியில் படிப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாயை லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு வழங்கினார் விஜய். இதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்தார் லாரன்ஸ்.

Related Posts