இன்றைய தினம் நடிகர் விஜய் இன் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குழுமி இருந்தனர்.
ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு இருந்தது.
நேற்று இரவும் VIP Show காட்சிகள் இருந்தும் அது நிறுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.